Amma Vanthal (Tamil)
Author: Thi Janakiraman
Publisher: Kalachuvadu Publications (2011-12-02)
fc854e9b-6bcb-4068-8

‘அம்மா வந்தா’ளை மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்துவரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை இல்லை. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை என்றும் இருவகையான கருத்தோட்டங்கள் உள்ளன. இந்தக் கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர்களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றனர். இந்த ஊசலாட்டத்தையே கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்.’